Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: மீட்பு பணிகள் நிறுத்திவைப்பு?

    துருக்கி நிலநடுக்கம்: மீட்பு பணிகள் நிறுத்திவைப்பு?

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியாவில் பல்வேறு அசம்பாவிதங்களை நிகழ்த்தி வருகிறது.

    இதுவரையில், சுமார் 46 ஆயிரத்திற்கு அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிப்ரவரி  6-ஆம் தேதி ஆரம்பித்த மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில்,  நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டநிலையில், இதற்கு மேல் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருதி மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    மேலும், இன்று முதல் துருக்கியில் நிலநடுக்கத்தால் சரிந்துவிழுந்திருக்கும் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மைக் குழு கூறுகையில், கிரேன்கள், டிரக்குகள், தொழிற்சாலை கருவிகள் பலவும் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

    பலி எண்ணிக்கையை பொறுத்தவரை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும், சுமார் 3,85,000 குடியிருப்புகள் இடித்துத் தள்ளப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    5000 ஆண்டுகள் பழமையான ஹோட்டல் கண்டுபிடிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....