Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு10371 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

    10371 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

    government job vacancies for teachers

    சென்னை: தமிழக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 ஆசிரியர், பேராசிரியர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று (ஜூலை 06) வெளியிட்டது.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள பல்வேறு ஆசிரியருக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் ஜூலை மாதத்தில் இருந்து நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    தேர்வுகளுக்கான முழு விவரங்களும் பின்வருமாறு:

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) விரிவுரையாளர்கள்:

    காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 155

    தேர்வு நடைபெறும் மாதம் – ஜூலை 2022

    உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்:

    காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 1874

    தேர்வு நடைபெறும் மாதம் – செப்டம்பர் 2021

    நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்:

    காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 3987

    தேர்வு நடைபெறும் மாதம் – செப்டம்பர் 2022

    கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள்:

    காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 1358

    தேர்வு நடைபெறும் மாதம் – இன்னும் அறிவிக்கப்படவில்லை

     பாலிடெக்னிக் கல்லூரி உதவி பேராசிரியர்கள்:

    காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 493

    தேர்வு நடைபெறும் மாதம் – இன்னும் அறிவிக்கப்படவில்லை 

    பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள்:

    காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை- 97

    தேர்வு நடைபெறும் மாதம் – இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    Trb recruitment
    தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.

    மேலும், 2022ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி வெளியானது. அதில், மார்ச் மாதம் 14ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

    தற்போது ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரையுள்ள தேதிகளில் தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு  அட்டவணை அனுமதிச்சீட்டு வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக ஆசிரியர் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....