Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பறந்துக்கொண்டிருந்த பயிற்சி விமானம்.. பயிற்சியாளர் பாசாங்கு செய்ததாக எண்ணிய விமானிக்கு அதிர்ச்சி..

    பறந்துக்கொண்டிருந்த பயிற்சி விமானம்.. பயிற்சியாளர் பாசாங்கு செய்ததாக எண்ணிய விமானிக்கு அதிர்ச்சி..

    விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமான பயிற்சியாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை பார்த்த சக விமானி, பாசாங்கு செய்வதாக நினைத்துக் கொண்டு விமானத்தை தரையிறக்கிய பின்பு தான் அதிர்ச்சி காத்திருந்தது.

    இங்கிலாந்தில் பிளாக்பூர் விமான நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.  

    அதன்படி, விமானியும் விமான பயிற்சியாளரும் ஒன்றாக விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர். அப்போது வழக்கம் போல இருவரது உரையாடலும் இருந்துள்ளது. இதையடுத்து விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயிற்சியாளர் திடீரென தலையைச் சாய்த்துள்ளார்.

    சக விமானியோ பயிற்சியாளர் உறங்கிவிட்டார் என நினைத்துள்ளார். அப்போது ஒரு சுற்று முடித்துவிட்டு திரும்பும்போது பயிற்சியாளரின் தலை, விமானியின் தோள் மீது சரிந்துள்ளது. இதனைப் பார்த்த விமானி, பயிற்சியாளர் பாசாங்கு செய்வதாக எண்ணி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

    பிறகு விமானம் தரையிறக்கப்பட்டபின், தனது தோளில் இருந்து பயிற்சியாளரின் தலையை தூக்கியபோதுதான், அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து விமானி, விமான நிலைய அவசரகால சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். 

    இதைத்தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து விமான பயிற்சியாளர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த விமான பயிற்சியாளர், 9 ஆயிரம் மணி நேரங்கள் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

    இறந்த தன் தாயின் உடலைக் கண்டு கதறி அழுத ஓபிஎஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....