Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஉதகை-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து

    உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து

    நீலகிரி மாவட்டம் உதகை-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதனால், சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், உதகை-குன்னூர் ரயில் பாதையில் இன்று (ஆகஸ்ட் 6) மரம் விழுந்ததால், குன்னூரிலிருந்து உதகை சென்ற மலை ரயில் கெத்தி பகுதி வரை இயக்கப்பட்டு, மீண்டும் குன்னூருக்கே திரும்பிச் சென்றது. 

    மேலும் உதகை-குன்னூர் இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. 

    நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 32 மி.மீ மழை அளவு  பதிவாகியுள்ளது. 

    ஓமனில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க தமிழக அரசு எழுதிய கடிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....