Thursday, May 2, 2024
மேலும்
    Homeவானிலைதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம்

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம்

    சென்னை: இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியின் காரணமாக, 

    இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    நவம்பர் 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    டிசம்பர் 2: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். 

    கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம், கொடிவேரி மற்றும் கொண்டேரிப்பள்ளம், கோவை மாவட்டம், PWD மாக்கினாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 8 சென்டி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. 

    மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே வெதர் மேன் என்று சொல்லப்படும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்த 2 நாட்களுக்கு – மேற்கு மற்றும் தெற்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் கிழக்கு திசை அலையில் சென்னை முதல் நாகை வரையிலான கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 1/2 முதல் 3/4 வரை மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஓடிடி-யில் எப்போது லவ்-டுடே? – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....