Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஓடிடி-யில் எப்போது லவ்-டுடே? - வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

    ஓடிடி-யில் எப்போது லவ்-டுடே? – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்

    லவ்-டுடே திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த திரைப்படம்தான், லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இத்திரைப்படம் இளைஞர்களிடையே சக்கை போடு போட்டு வருகிறது. பெருமளவு வசூல் வேட்டையையும் இத்திரைப்படம் நிகழ்த்தி வருகிறது. 

    லவ் டுடே திரைப்படத்தின் வெற்றி குறித்து , பல திரைப்பிரபலங்களும் தங்களது நேர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட பிரபல இயக்குநர் வசந்தபாலன் இது போன்ற திரைப்படங்களின் வெற்றி நம்பிக்கையைத் தருவதாக கூறியிருந்தார். 

    இதைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாரா விதமாக ‘லவ் டுடே’ திரைப்படம் டப் செய்யப்பட்டு தெலுங்கிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று தெலுங்கில் லவ்டுடே திரைப்படம் வெளியாகியுள்ளது. தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் லவ்டுடே வெளியாகி, அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இதன்பிறகு, லவ்-டுடே திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லவ்-டுடே திரைப்படம் வருகிற டிசம்பர் 2 -ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ‘இனி அனைவரும் கடல் பார்க்கலாம்’; சம வாய்ப்பை வழங்கும் மெரினா – ஒரு பார்வை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....