Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய ராணுவத்தில் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    இந்திய ராணுவத்தில் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    நாடெங்கும் கலவரத்தை ஏற்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் தரைப்படை மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஜீன் மாதம் 14-ம் தேதி அக்னிபத் என்ற திட்டம் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியலாம்.

    அக்னிபாத் திட்டதின் ஆரம்பத்தில், 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே ராணுத்தில் சேரமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், கடந்த மாதம் 16-ம் தேதி வயது வரம்பானது 23 வரை உயர்த்தப்பட்டது. 

    இதன்பிறகு, கடந்த 24-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக இந்திய விமானப்படைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராணுவ அமைச்சகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய விமானப்படைக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் பேர் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படைக்கு விண்ணப்பித்துள்ளனர். 

    இந்நிலையில், இன்று முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் தரைப்படை மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று ராணுவ அமைச்சகம் தெரவித்துள்ளது. 

    இங்கிலாந்துக்கு எதிராக இரு அணிகளை களமிறக்கும் இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....