Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்?

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்?

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி கூறியுள்ளார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி கூறியுள்ளார். இந்த பட்டமளிப்பு விழா பற்றி தன்னிடம் ஆலோசிக்காமல் முடிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இது பற்றி பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, ‘பல்கலைக்கழகங்களின் சார்பு வேந்தராகிய என்னிடம் கலந்தாலோசித்த பிறகே சிறப்பு விருந்தினரையும், கௌரவ விருந்தினரையும் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இது பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரிடம் கேட்டபோது, விருந்தினர்கள் அனைவரையும் ஆளுநர் அலுவலகம் தேர்வு செய்துள்ளது என கூறினார்.’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்த பட்டமளிப்பு விழாவுக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ‘கௌரவ விருந்தினர்கள் பொதுவாக பட்டமளிப்பு விழாவுக்கு அழைப்பது கிடையாது. மேலும், எல்.முருகன் கல்வித்துறை அமைச்சரவையிலும் இல்லை. அவரை கௌரவ விருந்தினராக அழைக்க வேண்டிய தேவை இல்லை.

    இதன் மூலம் தமிழக ஆளுநர், பட்டமளிப்பு விழாக்களில் அரசியலை புகுத்த முயற்சிக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.  மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு கட்டாயம் வேண்டும், ஆனால் அதற்காக பட்டமளிப்பு விழாக்களில் அரசியல் புகுத்துவது தேவையில்லாதது.’ என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பொன்முடி கூறியுள்ளார்.

    விருந்தினர்கள் பட்டியலை மாற்றுவதற்கு ஆளுநர் அலுவலகம் மறுத்ததாக கூறியுள்ள அமைச்சர் கே.பொன்முடி, ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி இல்லை எனவும், இந்திய அரசியலமைப்பில் எந்த இடத்திலும் ஒரு ஆளுநர், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை எனக் கூறியுள்ளார்.

    மேலும் ஆளுநர் கூறிய ‘ஆரியன்-திராவிடன் கருத்து என்பது நில அமைப்பைப் பொறுத்தது’ என்ற கருத்துக்கு பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, ‘தேசிய கல்விக்கொள்கையை படிக்கும்படி ஆளுநர் நம்மிடம் கூறுகிறார். இந்திய வரலாற்றை படிக்கும்படி ஆளுநரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். வரலாறு தெரியாமல் திராவிட கருத்துகள் பற்றி ஒருவர் கூறக்கூடாது.’ என்று கூறினார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மட்டுமல்லாது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வியாளர்களும் கௌரவ விருந்தினராக எல்.முருகன் அழைக்கப்பட்டிருப்பது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மதுரை காமராஜர் உறுப்பினர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.எஸ்.நாகராஜன் இதுபற்றி கூறுகையில், ‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாநிலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்கு சார்பு வேந்தராக மாநிலத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளார். அவரது ஆலோசனை இன்றி ஒன்றிய அமைச்சர் ஒருவரை விருந்தினராக அழைக்கக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.

    இதுபோல கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துவிட்டு, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடியிடம் ஆலோசனை பெற்று நிகழ்ச்சியை மீண்டும் ஏற்பாடு செய்யும்படி பதிவிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....