Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுரோந்து பணி சரியில்லை; திருவண்ணாமலையில் 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

    ரோந்து பணி சரியில்லை; திருவண்ணாமலையில் 6 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

    திருவண்ணாமலையில் 6 காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் 12 ஆம் தேதி அதிகாலைக்குள்ளாக 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் அங்குள்ள இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். காவல்துறையினர் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். அதன்படி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோதனையை தொடங்கினர். மேலும் தமிழக-ஆந்திர எல்லைகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. 

    வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்து இருப்பதாகவும், 9 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தெரிவித்தார். மேலும் பல மாநிலங்களுக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் போது சரிவர ரோந்து பணிகளை மேற்கொள்ளவில்லை என கூறி திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆறு காவல் அதிகாரிகளை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    அதன்படி, திருவண்ணாமலை காவல் நிலையத்தைச் சேர்ந்த மோகன், உதவி ஆய்வாளர் வரதராஜன், போளூர் காவல் நிலையத்தின் தட்சணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுதாகர், அருண், கலசப்பாக்கம் பலராமன் ஆகிய ஆறு பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    ‘நீங்க கஷ்டப்பட்றீங்கனு நினைச்சா… ‘ – ரசிகர்களை கவர்ந்த லவ்டுடே இயக்குநரின் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....