Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மகேந்திர சிங் தோனியால் மகிழ்ச்சியில் யோகிபாபு!

    மகேந்திர சிங் தோனியால் மகிழ்ச்சியில் யோகிபாபு!

    நடிகர் யோகி பாபுவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட் ஒன்றை பரிசளித்துள்ளார்.

    நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும், குணச்சித்திர பாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த ‘பொம்மை நாயகி’  படம் வெளியாகியது. 

    இந்நிலையில், யோகி பாபு தன் டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ‘தோனியின் கைகளிலிருந்து நேரடியாக வந்துள்ளது. அவர் வலைப்பயிற்சியில் பயன்படுத்தியது. மிக்க நன்றி தோனி சார். உங்களின் கிரிக்கெட் மற்றும் சினிமாவின் நினைவுகளை என்றும் ரசிக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இது சமந்தமான வீடியோ ஒன்றையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மகேந்திர சிங் தோனி தயாரிப்பில் உருவாகி வரும் ‘லெட்ஸ் கேட் மேரிட்’ படத்தில் யோகி பாபு தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா போன்றோரும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ‘நீங்க கஷ்டப்பட்றீங்கனு நினைச்சா… ‘ – ரசிகர்களை கவர்ந்த லவ்டுடே இயக்குநரின் பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....