Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் துணிவு திரைப்பட ரிலீஸ் தேதி இதுதானாம்..வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அஜித்குமாரின் துணிவு திரைப்பட ரிலீஸ் தேதி இதுதானாம்..வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமாரை இயக்கும் திரைப்படம்தான், துணிவு. இவர்களின் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ‘துணிவு’ தரமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

    துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொரு முறை வெளிவரும்போதும், ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் செல்கின்றனர். பின்பு, துணிவு திரைப்படம் எப்போது திரைக்கு வருமென்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். 

    அவ்வபோது, பொங்கல் வெளியிடாக துணிவு திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவித்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். இந்நிலையில், தற்போது துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணிவு திரைப்படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது. மேலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பதம் பார்த்த காலாண்டு முடிவு! அதிர்ச்சியில் ஊழியர்கள் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....