Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகார் மோதி சம்பவ இடத்திலே மூவர் பலி - அதிகரிக்கும் சாலை விபத்துகள் தொடரும்...

    கார் மோதி சம்பவ இடத்திலே மூவர் பலி – அதிகரிக்கும் சாலை விபத்துகள் தொடரும் சோகம்

    சோளிங்கர் – அரக்கோணம் சாலையில் உள்ள எஸ்.ஆர் கண்டிகை சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

    நேற்று (ஆகஸ்ட் 1) சோளிங்கர் – அரக்கோணம் சாலை, எஸ்.ஆர் கண்டிகை மின்னலம்மாள் கோயில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) அங்கு, சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த உண்ணாமலை (வயது 45), கன்னியப்பன் (வயது 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விபத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், இந்த விபத்து செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    23.66 கோடி மதிப்பில் புதிய வாகனங்கள்- தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....