Tuesday, April 30, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இந்த வாரம் வெளியாகப் போகும் திரைப்படங்கள் என்னென்ன?

    இந்த வாரம் வெளியாகப் போகும் திரைப்படங்கள் என்னென்ன?

    தமிழகத்தில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகப்போகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம். 

    செம்பி 

    நடிகர் அஸ்வின் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கோவை சரளா, தம்பி ராமையா போன்றோர் நடித்துள்ளனர். 

    மைனா, கும்கி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது நாளை வெளியாகிறது. 

    ராங்கி 

    நடிகை திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படமானது பெரிய ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து, த்ரிஷா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்தான், ராங்கி. 

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுத இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றிப்படங்களை  இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராங்கி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

    டிரைவர் ஜமுனா

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம்தான், டிரைவர் ஜமுனா. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய பி.கின்ஸிலின் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

    ஜிப்ரான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் டிரெயல்ர ரசிகர்களை கவர்ந்திருந்தது. 

    ஓ மை கோஸ்ட்

    நடிகை சன்னி லியோன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம்தான், ‘ஓ மை கோஸ்ட்’. இயக்குநர் யுவன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

    இத்திரைப்படத்தில், சின்னி லியோனுடன் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி-திரில்லர் பாணியில் உருவாகியிரு்க்கும் இத்திரைப்படமானது திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது. 

    இவைகள் மட்டும் இல்லாது, அருவா சண்ட், காலேஜ் ரோட், கடைசி காதல், சகுந்தலாவின் காதலன் போன்ற திரைப்படங்களும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. 

    வெங்கட் பிரபு – நாக சைதன்யா இணைந்த படம்; வெளிவந்த ரிலீஸ் தேதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....