Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை: முதல் ஆட்டத்திலேயே வெற்றிகொடி கட்டிய நமீபியா...

    உலகக் கோப்பை: முதல் ஆட்டத்திலேயே வெற்றிகொடி கட்டிய நமீபியா…

    உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் நமீபியா அணி, இலங்கை அணியை வீழ்த்தியது.

    இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக உச்ச நிலையை அடைந்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. 

    இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

    மேலும், நவம்பர் 9,10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

    இதையும் படிங்க: பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்; வைரலான காட்சிகள்

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் நேற்று முதல் ஆட்டம் தொடங்கியது. குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இலங்கை – நமீபியா அணிகள் மோதியது.

    இதில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதில் 20 ஓவர் முடிவில் நமிபீயா அணி 163 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்தது. 

    இதைத்தொடர்ந்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 19.5 ஓவரில் 112 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 

    இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதுவகை கிரிக்கெட் போட்டி….உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....