Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சாவூரில் திருவள்ளுவருக்கு கோயில்; மேளதாளம் முழங்க பிரதிஷ்டை!

    தஞ்சாவூரில் திருவள்ளுவருக்கு கோயில்; மேளதாளம் முழங்க பிரதிஷ்டை!

    தஞ்சாவூர் சாலியமங்கலத்தில் திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டு அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

    சங்கக் காலப் புலவர்களில் ஒருவர் திருவள்ளுவர். இவர் இயற்றிய திருக்குறள் நூல் இன்று உலகம் முழுவதும் பரவி உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. திருக்குறளில் உள்ள கருத்துகள் அனைவரது வாழ்க்கைக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. 

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் சாலியமங்கலம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் உலகப் பொதுமறை திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு மடம் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது அந்த மடத்தின் அருகிலே புதிய கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 

    கோயில் கட்டுமானப் பணி முடிவடைய உள்ள நிலையில், திருவள்ளுவர் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இங்கு கருவறையில் வைப்பதற்காக ஐம்பொன்னால் ஆன மூலவர் சிலை தயார் செய்யப்பட்டது. மேலும் கற்சிலை ஒன்றும் தயார் செய்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

    அதன்படி, இரண்டரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் திருவள்ளுவர் சிலை மற்றும் நான்கடி உயரம் கொண்ட கற்சிலை ஆகிய இரண்டும் கும்பகோணம் அருகே இருக்கும் பஞ்சலோக சிற்ப கூடத்தில் தயார் செய்து கொண்டு வரப்பட்டது. 

    இதன்பிறகு, சிலைகளை அலங்கார வாகனத்தில் வைத்து மேள தாள வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியே கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று பிரதிஷ்டை செய்தனர். 

    மதங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து; பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....