Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் வந்தபோது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை-டிஜிபி சைலேந்திர பாபு

    பிரதமர் வந்தபோது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை-டிஜிபி சைலேந்திர பாபு

    செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் வந்தபோது எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். 

    சென்னையில், டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரதமர் வருகையின் போது குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், நல்ல முறையிலேயே நடந்ததாகவும், இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார். 

    அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பபு உபகரணம் உள்பட அனைத்து உபகரணங்களும், எந்த நிலையில் இருக்கிறது என பரிசோதனை செய்வதாகவும், அதில் சில உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்றால், அதை மாற்றி புதிய உபகரணங்கள் வாங்குவதற்கான நடைமுறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

    தமிழகத்தில் தான் உயர்தர பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பதாகவும், அது மட்டுமின்றி தமிழகத்தில் தான் அதிகமான எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் இருப்பதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டி: கிடுக்குப்பிடி பந்துவீசிய நியூசிலாந்து, திணறிய இந்தியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....