Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

    இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்

    இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை – மத்திய அரசு திட்டவட்டம்

    உலக அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக நடந்து வரும் ரஷ்யா உக்ரைன் போரினால் கோதுமை அதிகமான விலையேற்றம் கண்டது.

    மேலும் உலகம் முழுவதும் உருவான வெப்ப அலையினால் பயிர் சேதமடைந்தது. இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் எந்தவித பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை.

    கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 2021-22 நிதி ஆண்டில் நாட்டில் 70 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டது.ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும் கூட, உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.

    இந்தியாவை பொறுத்தவரை 2020-21 ஆண்டு கோதுமை உற்பத்தி 10.96 கோடி டன். நடப்பாண்டில் இது இன்னும் குறைந்துள்ளது. இருப்பினும், 2016-17 லிருந்து கடந்த 5 ஆண்டுகளாகவே சராசரி ஆண்டு உற்பத்தியை விட அதிகமாகவே எட்டப்பட்டு வருகிறது.

    இதனை ஜூலை 1ம் தேதி நரேந்திர சிங் தோமா் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது எனவும் இதன் காரணமாக இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

    இது தொடர்பாக உணவு மற்றும் பொதுவிநியோக துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உள்நாட்டு தேவைக்கான கோதுமை போதிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோதுமை இறக்குமதி செய்வதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் எதிர்காலமாகத் திகழும்.. மத்திய கல்வி அமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....