Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் களைகட்டப்போகும் கண்கவர் பொருட்காட்சியும் புத்தக திருவிழாவும்.. மக்களே தயாரா?

    சென்னையில் களைகட்டப்போகும் கண்கவர் பொருட்காட்சியும் புத்தக திருவிழாவும்.. மக்களே தயாரா?

    சென்னை தீவுத்திடலில் வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்குகிறது. 

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. இந்தப் பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படும். குறிப்பாக குழந்தைகள் விளையாட ராட்டினங்களும் பொருட்களும் இருக்கும். அதே போல் தனித்துவமான கடைகளும் தின்பண்ட கடைகளும் இடம் பெறவுள்ளன. 

    அதே சமயம் பொதுமக்களை கவரும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற அம்சங்களும் இடம்பெறுகின்றன. அந்த வகையில், பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், பேய் வீடு போன்றவையும் இடம் பெறுவது வழக்கம். 

    இதுமட்டுமின்றி அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்ந்த அரங்கங்கள் இடம் பெற உள்ளன. குறிப்பாக மாநில பொதுப்பணித்துறை நிறுவனங்களின் செயல் விளக்க அரங்கங்கள், மத்திய அரசின் நிறுவனங்கள், எரிசத்தி துறை அரங்கங்கள் என பல வகையான அரங்கங்கள் இடம் பெறுகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காகவே அரசுத்துறை சார்ந்த அரங்கங்கள் இடம்பெறுகின்றன. 

    இந்தப் பொருட்காட்சி 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருட்காட்சியை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி முதல் 22 தேதி வரை 46-வது சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் 800 புத்தக கடைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இங்கு அணைத்து புத்தக பதிப்பக கடைகளும் திறந்து இருக்கும்.  

    உள்ளாடைக்குள் கிலோ கணக்கில் தங்கத்தை மறைத்து கடத்திய இளம்பெண்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....