Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அனுமதி மறுத்த தமிழக காவல்துறை., கொதித்தெழுந்த ஆர் எஸ் எஸ்., வரவேற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் ...

    அனுமதி மறுத்த தமிழக காவல்துறை., கொதித்தெழுந்த ஆர் எஸ் எஸ்., வரவேற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் …

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அன்று நடத்த திட்டமிட்டிருந்த பேரணிக்கு, தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

    தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மாநில உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அனுமதி கோர்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகளை நடத்திக்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்ததோடு, தமிழக காவல்துறையிடமும் முறையான அனுமதி பெற்று பேரணியை நடத்த உத்தரவிட்டிருந்தது.

    மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும், செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை தற்போது அனுமதி மறுத்துள்ளது.

    இதையும் படிங்க: வடிவேலு பட பாணியில் ‘அரசு மருத்துவமனையை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    ஏற்கனவே திருச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், ஆம்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு, காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தாகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், அவர்களுக்கான அனுமதியையும் தர தமிழக காவல்துறை மறுத்துள்ளது. தமிழகத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழக காவல்துறையின் இந்த முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் .

    அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார் . அதேபோல் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி தந்தது மிகப்பெரிய ஆச்சர்யம் ., ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் நீதிமன்றம் பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என தெரிவித்துள்ளார்.

    இவரைப்போலவே ஆர்.எஸ்.எஸ் பேரணி என்பது திட்டமிட்ட ஒரு சதிச்செயல், சதி திட்டம் தீட்டுவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நோக்கம். காந்தியை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் தண்டிக்கப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி நாளில் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது. ஆர்.எஸ்.எஸ் பேரணி காரணமாக சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று முத்தரசனும் காவல்துறையின் முடிவை வரவேற்றுள்ளார்.

    இந்நிலையில், காவல்துறையின் இந்த அனுமதி மறுப்பை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய மனுத்தார்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....