Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தலைமை செயலகத்தில் புதிய அமைச்சருக்காக தயாராகி வரும் அறை! வருகிற 14-ஆம் தேதி அமைச்சராகிறாரா உதயநிதி?

    தலைமை செயலகத்தில் புதிய அமைச்சருக்காக தயாராகி வரும் அறை! வருகிற 14-ஆம் தேதி அமைச்சராகிறாரா உதயநிதி?

    தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருகிற 14-ஆம் தேதி சேர்க்கப்பட இருப்பதாகவும் இதற்காக தமிழக ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவருக்கு இலாகா ஒதுக்கப்பட்டு அவர் அமைச்சராக செயல்படுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பத்தாவது நுழைவாயில் அருகே உள்ள ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ அறை பொதுப்பணித்துறையினரால் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

    தமிழக அமைச்சரவை வலுப்படுத்தும் விதமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் தலைமைச் செயலத்தில் உள்ள முதல் தளத்திலும் இரண்டாவது தளத்திலும் அமைச்சர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு, இலாக வாரியாக அமைச்சர்கள் அந்த அறையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ,‌ தலைமைச் செயலகத்தின் பத்தாவது நுழைவாயிலில் உள்ள அறை ஒன்று பொதுப்பணித்துறை உத்தரவின் பேரில், பணியாளர்கள் அந்த அறையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இலாகா ஒதுக்கப்பட்டால் பத்தாது நுழைவாயிலில் உள்ள அமைச்சர் அறை அவருக்கு ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அதிருப்தியில் இருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இனி ட்விட்டரில் கதையே எழுதலாம்… எலான் மஸ்க்கின் அதிரடி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....