Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கத்துக்கு நிகரான மல்லிகை பூ! இந்த விலையேற்றத்துக்கு இதுதான் காரணமா?

    தங்கத்துக்கு நிகரான மல்லிகை பூ! இந்த விலையேற்றத்துக்கு இதுதான் காரணமா?

    மதுரையில் ஒரு கிலோ மல்லி விலை 3 ஆயிரம் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது. 

    மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

    குறிப்பாக, மதுரைக்கு பேர் போன மல்லி ஒரு கிலோ 1500 முதல் 3000 வரை விற்பனையாகி வருகிறது. 

    மதுரை, மாட்டுத்தாவணியில் ஒரு கிலோ முல்லையும் பிச்சியும் 1500 ரூபாய்க்கும், ரோஜா, அரளி மற்றும் பட்ரோஸ் ஆகியவை 200 ரூபாய்க்கும், சம்பங்கி 100 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 50 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும், துளசி 40 ரூபாய்க்கும் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    அதேபோல் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் அங்கு, குண்டு மல்லி கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ரோஜா கிலோ 250 ரூபாய்க்கும், முல்லை மற்றும் பச்சை முல்லை ஒரு கிலோ 1500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. 

    மேலும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு கிலோ மல்லிப்பூவின் விலை 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,016 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், மல்லிப்பூ ஒரு கிலோ 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவது தங்கத்துக்கு நிகராக மல்லிகை பூ விலையா என மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

    கடும் பனிப்பொழிவாலும், விழா காலங்களில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும், அதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்திருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    கோலாகலமாக தொடங்கியது அண்ணாமலையார் கோயில் தேரோட்டம்! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....