Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தெற்கு அந்தமான் அருகே உருவான காற்று அழுத்த தாழ்வு பகுதி. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது மாண்டஸ் புயலாக மாறி உள்ளது.

    மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடைப்பட்ட கடலோர பகுதிகளில் சென்னையில் 9-ஆம் தேதி இரவு அல்லது 10-ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது .

    இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவது மட்டுமல்லாமல் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

    மாண்டஸ் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படலாம்! வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....