Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுப்பைத் தொட்டியில் வெட்டி கிடந்த 'கை'.. அலறி ஓடிய தூய்மைப் பணியாளர்கள் - கோவையில் பரபரப்பு

    குப்பைத் தொட்டியில் வெட்டி கிடந்த ‘கை’.. அலறி ஓடிய தூய்மைப் பணியாளர்கள் – கோவையில் பரபரப்பு

    கோவை அருகே குப்பைத்தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை மீட்கப்பட்டுள்ளது. 

    கோவை துடியலூர் அருகே உள்ள பகுதிதான் வெள்ளக்கிணர். இந்தப் பகுதியில் உள்ள வி.கே.எஸ் நகர் பகுதியில் எப்போதும் போல நேற்று(செப்டம்பர்-15) காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனம் மூலம் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது. என்னவென்று பார்க்க அந்த பையில் இரண்டு துண்டுகளாக ஆணின் கை இருந்துள்ளன. 

    இதைக்கண்ட தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாது, துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் விரைந்து வந்தனர். தற்போது இந்நிகழ்வு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....