Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்வெள்ளக்காடாக மாறிய போர் வீரர்களின் கல்லறை...மழையின் கோர தாண்டவம்..!

    வெள்ளக்காடாக மாறிய போர் வீரர்களின் கல்லறை…மழையின் கோர தாண்டவம்..!

    சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் போர்வீரர்களின் கல்லறையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு மெட்ரோ பணியாளர்கள் நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    சென்னை கிண்டி அருகே உள்ள டிபன்ஸ் காலனி பகுதியில் போர்வீரர்களின் கல்லறை உள்ளது. பூந்தமல்லி நோக்கிச் செல்லக்கூடிய சாலையில் தாழ்வான பகுதியாக இருப்பதால், அந்த கல்லறையில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று நள்ளிரவு முதல் பெய்த மழை காரணமாக, போர் வீரர்களின் கல்லறையில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

    இவ்வாறு தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அங்கு மழைநீர் செல்ல கால்வாய் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    இருப்பினும் அந்த கால்வாயில் அங்குள்ள வணிக நிறுவனங்கள் அதிக குப்பைகளை கொட்டியதால் மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்தது.

    இந்த நிலையில், தற்போது அந்த குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அங்குள்ள மெட்ரோ பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 6 பேர் விடுதலை: 30 ஆண்டுகால போராட்டத்திற்கும்., மனித உரிமைக்கும் கிடைத்த வெற்றி..! மு க ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....