Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா10 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

    10 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக 10 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. இந்நிலையில் இன்று புதிதாக 10,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 10,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,68,195 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 96,442 ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 36 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,27,452 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,677 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,44,301 ஆக அதிகரித்துள்ளது. 

    நாடு முழுவதும் இதுவரை 210.58 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ஒக்கேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு; குளிக்க தடை நீட்டிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....