Saturday, May 4, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் 'தளபதி-67' குறித்து அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

    விஜய்யின் ‘தளபதி-67’ குறித்து அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ள ‘தளபதி-67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த 11-ஆம் தேதி வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. அதேநேரம், திரைப்படத்தின் வசூல் என்பது அபரிவிதமாக உள்ளது. 

    இதைத்தொடர்ந்து, விஜய்யின் 67-ஆவது படத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணையவுள்ளனர். 

    இதனிடையே, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்கள் இடத்தில் அதிகளவில் உள்ளது. 

    மேலும், விஜய்யின் 67-ஆவது படத்தை குறித்த அதிகார அறிவிப்பு எப்போது வருமென்றும், படத்தின் படப்பிடிப்பு எப்போதென்றும் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் ‘தளபதி 67’ எனப்படும் விஜய்யின் 67-ஆவது படம் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வெளியாகுமென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரியில் பாரம்பரிய பொங்கலை கொண்டாடிய முதல்வர், ஆளுநர்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....