Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்புதுச்சேரியில் பாரம்பரிய பொங்கலை கொண்டாடிய முதல்வர், ஆளுநர்..

    புதுச்சேரியில் பாரம்பரிய பொங்கலை கொண்டாடிய முதல்வர், ஆளுநர்..

    புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

    பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் புதுச்சேரி ராஜ் நிவாஸில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகை வெளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கல் பானையில் அரிசியை இட்டு உறியடி எடுத்து பொங்கல் விழாவை தமிழிசை துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கச்சாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைச் செயலர் முதல் அனைத்து அரசு அதிகாரிகளும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர். விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    தமிழர்களின் பாரம்பரிய கலையான மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், கரகாட்டம் போன்றவற்றை உள்ளூர் கலைஞர்கள் ஆடினார்கள். இதனைத் தொடர்ந்து மாட்டுவண்டி ஊர்வலத்தை துணை ஆளுநர் தமிழிசை துவக்கி வைத்தார்.

    விழாவில் சிறுதானிய விருந்து அளிக்கப்பட்டது. தர்பூசணி ஜூஸ், கம்பு லட்டு, ராகி சேமியா கேசரி, சிறுதானிய இட்லி, சிறுதானிய வடை, சேமியா பாயாசம், தினை பொங்கல், குதிரைவாலி பொங்கல், திணை மாவு தோசை போன்றவை உணவாக வழங்கப்பட்டன.

    ஹாக்கி உலகக் கோப்பை; இந்தியா யாருடன் மோதப்போகிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....