Friday, April 26, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காஷ்மீருக்கு பறந்த 'தளபதி 67' படக்குழு; வியக்கவைத்த விஜய் ரசிகர்கள்!

    காஷ்மீருக்கு பறந்த ‘தளபதி 67’ படக்குழு; வியக்கவைத்த விஜய் ரசிகர்கள்!

    தளபதி 67 படப்படிப்பிற்காக லோகேஷ் கனகராஜ் உட்பட படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. 

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறரா். இப்படத்திற்கு தற்காலிகமாக, ‘தளபதி-67’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  தளபதி-67 குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியானது. இதனால், சமூகவலைதளங்களில் ‘தளபதி-67’ என்ற ஹாஷ்டேக் அதிகளவில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில், இன்று இப்படக்குழுவினர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான தனி விமானத்தில் ‘தளபதி-67’ படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, விமானத்தில் செல்வோர்களின் பெயர் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    அந்தப் பட்டியலில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, நடிகை த்ரிஷாவின் பெயரும், நடிகை ப்ரியா ஆனந்தின் பெயரும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், த்ரிஷா ‘தளபதி-67’ திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    விஜய் ரசிகர்கள், விமானத்தில் செல்வோர்களின் பெயர் பட்டியலைத் தேடி அதிலிருந்து தகவல்கள் சேகரித்துள்ள நிகழ்வானது பலரையும் வியப்படையச் செய்திருக்கிறது. 

    ‘சிங்கத்தின் அசைவுகளை ரசிக்க ஒரு தருணம் கிடைத்தது’ – பிரபல இயக்குநர் குறித்து வசந்தபாலன் பதிவு!  

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....