Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசி: கிணறு வெட்டும்போது நேர்ந்த வெடி விபத்து - 3 பேர் பலி

    தென்காசி: கிணறு வெட்டும்போது நேர்ந்த வெடி விபத்து – 3 பேர் பலி

    தென்காசியில் கிணறு வெட்டும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர். 

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த பால் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியைத் தொடங்கினார். 

    இதையடுத்து, கிணறு வெட்டும் ஒப்பந்த பணியை காலத்திடம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் அவரது ஊழியர்களுடன் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 10 நாட்களாக மண் பகுதியை தோண்டி எடுத்த தொழிலாளர்கள் இன்று காலை பாறையை வெடிவெடித்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது எதிர்ப்பாராத விதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆசிர் சாம்சன் என்ற தொழிலாளியும் உயிரிழந்தார். 

    இதனிடையே உயர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு 108-ல் அழைத்து செல்லப்பட்ட ஆணையப்ப புரத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் (50) உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ராணுவ வீரரை கொலை; திமுக வார்டு உறுப்பினர் உள்பட 9 பேர் கைது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....