Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

    வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

    வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரவுடிகளை கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். 

    தமிழ்நாட்டில் ‘ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் 72 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 95 ரவுடிகளை கைது செய்தனர். 

    இதையடுத்து, தொடர் விசாரணை நடத்தப்பட்டதில் ரவுடிகள் ஆந்திரம், கேரளம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதே சமயம், வெளி மாநில ரவுடிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தருவதாக சொல்லப்படுகிறது. 

    மராட்டியம், பீகார் போன்ற வெளி மாநிலங்களில் கள்ள துப்பாக்கிகள் கிடைக்கும் என்பதால் அம்மாநிலங்களுக்கு ரவுடிகள் படையெடுத்து செல்வதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், இதுபோன்ற ரவுடிகளை ரகசியமாக கண்காணிக்க வேண்டும் என்றும், வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரவுடிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    இதைத்தொர்ந்து ஆறு மாதங்களில் ஜாமினில் வெளிவந்துள்ள ரவுடிகள் குறித்த பட்டியலை காவல்துறையினர் தயார் செய்துள்ளனர். 

    மேலும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ரவுடிகளை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என்றும், சிலர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை அம்மாநில காவல்துறையின் உதவியுடன் விரைவில் கைது செய்ய இருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....