Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    அண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    திருவண்ணாமலை மகா தீபத்தை காணச் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக வருகிற டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

    உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கார்த்திகை தீபத் திருவிழா கோயில் உள்வளாகத்திலேயே  நடைபெற்றது. அதேபோல் சாமி உலா, தேரோட்டம் போன்றவை கோயிலின் 5-வது பிரகாரத்தில் நடைபெற்றன.

    தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், எப்போதும் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. 

    இந்த ஆண்டு தீபத் திருவிழா வருகிற நவம்பர் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சி என்று சொல்லப்படும் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் ஏற்றப்படும்.

    இதைத்தொடர்ந்து, கோயிலின் பின் புறத்தில் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் மாலை 6 மணியளவில் ஏற்றப்படும். இதையடுத்து அடுத்த மூன்று நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடையும். 

    இந்நிலையில் மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வார்கள் என்பதால், அவர்களின் வசதிக்கு டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்திருக்கிறது. 

    மேலும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், உணவு போன்றவற்றுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் அன்னதானம் அளிக்க விரும்புவோர், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் இடங்கள் மற்றும் சொந்த இடங்களில் மட்டுமே அன்னதானம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருகிற நவம்பர் 26 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே, நேற்று அண்ணாமலையார் திருக்கோயிலின் 5-வது பிரகாரத்தில் 1000 கால் மண்டபம் பக்தர்களின் பயன்பாட்டுக்காக முதல் முறையாக திறக்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....