Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். 

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஜூலை 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தார்.

    இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியது: 

    “உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.” என்று தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கும் முதல்வருக்கு சி-டி ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். மேலும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியானது. 

    இதனிடையே, இன்று சி-டி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    மேலும் மருத்துவக் கண்காணிப்புக்காகவும் மருத்துவ பரிசோதனைக்காகவும் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று; நலம் பெற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....