Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் தொடரும் உயிர் பலி..! மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

    சென்னையில் தொடரும் உயிர் பலி..! மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

    பூவிருந்தவல்லிக்கு அருகே உள்ள மாங்காடு மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். 

    காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றுள் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் பூவிருந்தவல்லிக்கு அருகே உள்ள  மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வந்தது. மழை காரணமாக வடிகால் பணி நடைபெற்ற இடம் சேறும் சகதியுமாக இருந்துள்ளதால், வடிகால் பணி கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில்தான், மழைநீர் வடிகால் பணி நடைபெற்ற வழியாக சென்ற 42 வயதான தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி என்பவர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகினார். தகவலறிந்து வந்த மீட்பு துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பின்றி நடந்து வந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக, சென்னையில், தற்போது ஆரம்பித்துள்ள வடகிழக்கு பருவ மழையால் வெவ்வேறு வழியில் மூன்று பேர் இறந்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: சென்னையை சேர்ந்த 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு; வெளியான அதிர்ச்சி தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....