Friday, May 3, 2024
மேலும்
    Homeவானிலை'நம்மை நோக்கி வரும் சக்கரம்' மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சூசக எச்சரிக்கை!

    ‘நம்மை நோக்கி வரும் சக்கரம்’ மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சூசக எச்சரிக்கை!

    இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற முக்கிய தகவலை தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் என்று சொல்லப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சீர்காழியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது. 

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. 

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்களிலும் 122 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச கனமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது. 

    இந்நிலையில் அடுத்த மழை எப்போது பெய்யும் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் என்று சொல்லப்படும் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொஞ்சம் மழை அதற்கு பிறகு ஒரு வார வறண்ட வானிலையே இருக்கும். காலை நேரங்களில் பனியைக் கூட உங்கள் வாகனங்களில் பார்க்க முடியும். 

    பள்ளி செல்லும் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை குறைத்து வைக்கவும் (குன்றத்தூர் பசங்களை தவிர) கொஞ்சம் கஷ்டம் தான்.  

    இன்று தென் தமிழக பகுதி குமரி, நெல்லை, தூத்துக்குடி அருகில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும். கொங்கு பெல்ட் பகுதிகளில் நல்ல மழை பொழியும். அடுத்த மழை 20ம் தேதி தொடங்கலாம். 

    ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். அது புயலாகவும், தாழ்வு பகுதியாகவோ மாறலாம். இந்த சீசனில் நமக்கு முதல் சக்கரமாக இருக்கலாம். அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர்! எமனுக்கே ‘டாடா’ காட்டி உயிர் தப்பிய அதிசயம்-வைரல் வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....