Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமேகதாது தொடர்பாக விவாதிக்கவில்லை- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

    மேகதாது தொடர்பாக விவாதிக்கவில்லை- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

    காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த விசாரணையின்போது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஜூலை 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும், இந்த மனுவை விசாரிக்க வேண்டாம் என கர்நாடக அரசு விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி, ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் முடிவில் தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 21-ம் தேதி 16-வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அறிவித்தது. 

    இந்நிலையில், நேற்று (ஜூலை 22) காவிரி நீர்  மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவகத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில்  நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் தமிழக வழக்குரைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    அதேபோல், கர்நாடக மாநிலத்தின் சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ் சிங் கலந்துக் கொண்டார். மேலும், கேரள மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பிரதிநிதிகள் காணொளி வாயிலாக கலந்துக் கொண்டனர். முன்னதாக, நான்கு மாநில பிரதிநிகளும் நீர் வழங்கல் உள்ளிட்ட புள்ளி விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். 

    தமிழக அரசு சார்பில் கலந்துக் கொண்ட அதிகாரிகள், காவிரியில் இருந்து மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவின் அளவு, நீர்வரத்து ஆகியவை குறித்தும் விரிவாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  

    உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நேற்று (ஜூலை 22) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....