Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம்

    இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் திட்டம்

    பள்ளிகளில் இருந்து இடையில் நின்ற மாணவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்க்கும் திட்டத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

    பள்ளிகளுக்கு செல்லாத, பள்ளிகளில் இருந்து இடையில் நின்ற சிறார்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 

    • நான்கு வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.
    • EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
    • 5, 8, 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். 
    • சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, சிறப்புத் தேவை, குழந்தைத் திருமணம், இடம் பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
    • புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

    இனி ஆசிரியர்களின் வருகை செயலியில் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....