Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'மகளை கவனித்துக்கொள்' - விபத்தில் உயிரிழந்த விமானி கடைசியாக பேசிய வார்த்தைகள்!

    ‘மகளை கவனித்துக்கொள்’ – விபத்தில் உயிரிழந்த விமானி கடைசியாக பேசிய வார்த்தைகள்!

    கேதார்நாத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குறித்து தகவல் வெளிவந்துள்ளது. 

    உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் குகைக்கோயில் ஒன்றுள்ளது. இந்த கோயில் உலகளவில் மிகவும் பிரபலமானதாகும். ஆதலால், இந்த கோயிலுக்கு வருடந்தோறும் பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்றே. 

    குகைக்கோயில் செல்பவர்கள், ஹெலிகாப்டர் மூலம், பேருந்துகள் மூலம், நடைபயணம் மூலம் செல்வர். அந்த வகையில் நேற்று உத்தரகண்ட் மாநிலம் பாதாவிலிருந்து கேதார்நாத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் நேற்று திடீரென விபத்திற்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி அனில் சிங் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

    மேலும், ஒருவர் காயமடைந்து, சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் 7 பேரும் பலியாகியுள்ளதாக உத்தரகண்ட் காவல்துறை தகவல் தெரிவித்தது.

    தற்போது, உயிரிழந்தவர்களில் பிரேம்குமார் (63), கலா (50), சுஜாதா (56) ஆகிய மூவரும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற அனில் சிங் குறித்து அவரது மனைவி தெரிவித்துள்ளார். அதன்படி, ‘அவர் கடைசியாக என்னிடம் நேற்று (திங்கட்கிழமை – நேற்று முன் தினம்) பேசினார். என் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. மகளை கவனித்துக்கொள் என அவர் என்னிடம் கூறினார்’ என்று தெரிவித்துள்ளார். அனில் சிங்கிற்கு பிரோசா சிங் என்ற மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து; சென்னையை சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் பலி

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....