Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'அம்புட்டும் பொய்யா' - கே.எல்.ராகுல் திருமண பரிசுகள் குறித்து வெளிவந்த தகவல்!

    ‘அம்புட்டும் பொய்யா’ – கே.எல்.ராகுல் திருமண பரிசுகள் குறித்து வெளிவந்த தகவல்!

    அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் திருமணத்தின் பரிசுகள் பற்றி இணையத்தில் உலவி வரும் செய்திகள் குறித்து அதியா ஷெட்டியின் தந்தை சுனில்ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். 

    கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் நண்பர்களாக இருந்த நிலையில், இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்து பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் அதிவேகத்தில் நடந்து வந்தன. நடிகர் சுனில் ஷெட்டி தரப்பில் அதிகாரப்பூர்வமாக திருமணம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

    இதன்பின்னர், கடந்த 23-ஆம் தேதி கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பாலிவூட் பிரபலங்களில் சிலரும், கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் கலந்துக்கொண்டனர். 

    இதைத்தொடர்ந்து, கே.எல். ராகுல் திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவியது. பரவிய தகவலில், அதியா ஷெட்டியின் தந்தையான சுனில் ஷெட்டி 50 கோடி மதிப்பில் பிரமாண்ட வீடு ஒன்றையும், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆடம்பர வாட்ச்சையும், நடிகர் அர்ஜுன் கபூர் ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர பிரேஸ்லெட் ஒன்றையும் அதியாவுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

    அதேபோல, கிரிக்கெட் வீரர் விராட் கோலி மணமகன் கே.எல்.ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியதாகவும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மணமகனுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆடம்பர பைக் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

    இந்தச் செய்திகள் குறித்து தற்போது கே.எல்.ராகுலின் மாமனாரும், நடிகருமான சுனில் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் திருமணத்தின் பரிசுகள் பற்றி பத்திரிகையாளர்கள் வெளியிடும் செய்திகள் முற்றிலும் தவறானவை. தயவுசெய்து, இதுபோன்ற தவறான தகவல்களைப் பொதுத்தளத்தில் வெளியிடுவதற்கு முன் அது உண்மையான தகவல்களா என்று உறுதிப்படுத்துங்கள். அதற்குப் பிறகு வெளியிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, தற்போது சமூகவலைதளத்தில் ‘அப்போ, அதெல்லாம் பொய்யா’ என்ற தொனியில் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    பணிநீக்க நடவடிக்கையில் களமிறங்கிய ஐபிஎம்; அதிர்ச்சியில் ஊழியர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....