Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஸ்டிக்கர்ஸ் ஓட்டும் வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்; மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

    ஸ்டிக்கர்ஸ் ஓட்டும் வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்; மக்கள் வாழ்வுரிமை இயக்கம்

    வாகன எண் பலகைகளில் தலைவர்கள், நடிகர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அதனை அமல்படுத்த வேண்டும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

    மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ.ஜெகன்நாதன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தனிநபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக, வாகன உரிமையாளர்கள், தாங்கள் விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்களின் பெயர், படங்கள் போன்றவைகளை எண் பலகையில் (Number Plate) ஒட்டிக் கொள்கிறார்கள். தங்கள் விருப்பம் போல் எண் பலகையில் வித்தியாசமான வடிவில் எண்களை எழுதிக் கொள்கின்றனர். இது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். வாகன எண் பலகைகளில்(Number Plate) மோட்டார் வாகனச் சட்டப்படி விதிமீறல்கள் மீறி பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என்பதால் போக்குவரத்துறை இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், புதுச்சேரியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டு இருக்கும், எண் பலகைகளில் (Number Plates) மோட்டார் வாகன சட்டங்களை மீறி எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும், நடிகர்கள் மற்றும் தலைவர்கள் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்(Sticker) என அனைத்து வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    மேலும் போக்குவரத்து துறை (RTO) போக்குவரத்து காவல் துறை(Traffic Police) மற்றும் காவல்துறை கூட்டாக இணைந்து வாகன சோதனை நடத்தி உயர் நீதிமன்ற உத்தரவை உரியவகையில் செயல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

    ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்! அதிமுக கோரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....