Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

    பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

    பள்ளிகளில் கல்வி அல்லாத பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால், தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

    தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பதற்காக வரக்கூடிய இடம் தான் பள்ளிக்கூடம். அதனால் குழந்தைகளை படிப்புக்கு மட்டுமே ஆசிரியர்களும், அவர்களை சார்ந்தவர்களும் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

    அதோடு, வேறு விதங்களில் மாணவர்களை பயன்படுத்தினால் துறை ரீதியாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். 

    தொடர்ந்து பேசிய அவர், பொதுத்தேர்வை மாணவர்கள் பதற்றப்படாமல் அச்சமின்றி எழுத வேண்டும் என்றும், கடைசி நேரத்தில் மட்டுமே படிப்பதைத் தவிர்த்து, இப்போதிலிருந்தே படித்தால் தேர்வு அச்சத்தைத் தவிர்த்துவிடலாம் என்றும் கூறினார்.

    இதைத்தொடர்ந்து திருச்சி திருவெறும்பூரில் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என்று ஆணையத்திடம் தெரிவித்து பணிநிரவல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அப்படி பணியிட மாற்றம் செய்தால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவர் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணம் கொடுத்து வெற்றி பெற இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவதிலிருந்தே, அவர்களுக்கு தோல்விப் பயம் தொடங்கி விட்டது என்பது நன்றாக தெரிவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

    ‘கடலுக்குள் பேனாவை வைத்தால், நான் உடைப்பேன்’ – சீமானின் பேச்சால் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....