Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைபொருளாதார சிக்கலில் உள்ள நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை!

    பொருளாதார சிக்கலில் உள்ள நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை!

    இலங்கையின் பொருளாதார நெருக்கடி நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஐநா நிர்வாகி தெரிவித்துள்ளார். 

    இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியால், இலங்கையில் உணவு, சுகாதாரம், எரிபொருள் பற்றாக்குறை என அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    இந்த நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. இந்தியா, ரஷ்யா உள்பட பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கையில் தற்போது நிலவி வரும் நெருக்கடியில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது. 

    இந்நிலையில், கொரோனா தொற்று தாக்கத்தினால் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் உள்ள நாடுகள், இலங்கையின் தற்போதைய நிலைக்கு ஆளாகலாம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. 

    இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளதாவது: 

    “இலங்கையில் நிலவும் மோசமான நிகழ்வுகளை நாம் காண்கிறோம். இது போன்ற நெருக்கடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தற்போதே பொருளாதார சிக்கலில் உள்ள நாடுகள் கண்டுபிடிக்க வேண்டும். இலங்கையின் தற்போதைய நிலை நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

    ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் புதிய ஆய்வில், 2021-ம் ஆண்டு உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82.8 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. 

    மேலும், 2020-ம் ஆண்டில் இருந்து 4 கோடியே 60 லட்சமாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும், கொரோனா தொற்றுச் சமயத்தில் இந்த எண்ணிக்கை 15 கோடி என்றும் ஐநா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    நேற்று, இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே ரஷ்ய அதி­பர் புதி­னிடம், எரிபொருள் இறக்குமதி செய்ய உதவி செய்யுமாறு தொலைபேசி வாயிலாக கோரியது குறிப்பிடத்தக்கது. 

    ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....