Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநடுக்குப்பம் பகுதியில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!

    நடுக்குப்பம் பகுதியில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடுக்குப்பம் பகுதியில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.12.2022) தேனாம்பேட்டை மண்டலம், வார்டு- 120க்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியுதவிடன் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வார்டு–120க்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    udhayanidhi stalin

    சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைத்தல், 230 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி, பழைய கழிவுநீர் அமைப்பினை இணைக்கும் பணி மற்றும் 370 மீட்டர் நீளத்தில் கழிவுநீர் உந்து குழாய் அமைக்கும் பணி என 4 திட்டப்பணிகள் ரூபாய் 1 கோடியே 24 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் நடுக்குப்பத்தில் 1 முதல் 8 தெருக்கள் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருவில் உள்ள 3000 பொதுமக்கள் பயன்பெறுவர்.

    இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ரா.மங்கை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடுக்குப்பம் பகுதியில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    chepauk triplicane

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (20.12.2022) தேனாம்பேட்டை மண்டலம், வார்டு- 120க்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    2-வது நாளாக தில்லியில் கடும் குளிர்; போக்குவரத்து பாதிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....