Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா2-வது நாளாக தில்லியில் கடும் குளிர்; போக்குவரத்து பாதிப்பு

    2-வது நாளாக தில்லியில் கடும் குளிர்; போக்குவரத்து பாதிப்பு

    தில்லியில் 2-வது நாளாக கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

    பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், வடக்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    குறிப்பாக ஹரியானா, சண்டிகர், தில்லி, ஹிமாச்சல், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்று காலை 5.30 மணிக்கு புது தில்லியில் 11.1 டிகிரி செல்சியஸ் காணப்பட்டது. அதிக பனிமூட்டம் காரணமாக சுமார் 50 மீட்டர் வரை பார்வை நிலை குறைந்து, சாலைப்போக்குவரதும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எப்போதும் போல் விமான போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டது. 

    கடுமையான பனிமூட்டம் காரணமாக தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்துகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 

    வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல்; வெளியான முன்னோட்ட வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....