Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.. அரங்கநாதர் திருக்கோவிலில் தீப ஆராதனை

    புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு.. அரங்கநாதர் திருக்கோவிலில் தீப ஆராதனை

    ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.

    108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். 

    புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை தரிசிப்பது அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்வதற்கு சமம் என்பது ஐதீகம். 

    இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

    இதனிடையே, இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க பக்தர்களுக்கு சேவை நேரம் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று (செப்டம்பர் 24) சுவாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதரான நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் தெய்வ ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்து சென்றனர்.

    மேலும், பூஜை நேரங்கள் மற்றும் சேவைகள் குறித்து ஸ்ரீ ரங்கநாத கோயிலின் இணை ஆணையர் மாரிமுத்து முன்னதாக தெரிவித்துள்ளதாவது:

    அடுத்த மாதம் (அக்டோபர்) 1 ஆம் தேதி, 8 ஆம் தேதி ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரையும் சேவை நேரம் ஆகும்.

    இந்த நாட்களில் விஸ்வரூபம், பொதுஜன சேவை இல்லை. அதேபோல் பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பூஜை காலம் என்பதால் சேவை கிடையாது. 

    மேலும், அடுத்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சேவை நேரம் ஆகும்.

    பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும் பூஜ காலம் என்பதால் சேவை இல்லை. மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை பூஜை காலம் மற்றும் புறப்பாடு நடைபெறும். மேற்கண்ட 4 சனிக்கிழமைகளிலும் விஸ்வரூபம் பொதுஜன சேவை இல்லை. 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காணத்தவறாதீர்கள்.. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசய நிகழ்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....