Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெண்களுக்காக ஸ்பெயினில் நிறைவேற்றப்பட்ட மசோதா...

    பெண்களுக்காக ஸ்பெயினில் நிறைவேற்றப்பட்ட மசோதா…

    பெண்களுக்கு பணிக்காலங்களில் மாதவிடாய் விடுமுறை மசோதாவை ஸ்பெயின் நிறைவேற்றியுள்ளது. 

    உலகெங்கிலும் பல நாடுகளில், பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது. 

    இந்நிலையில், அதற்கான அரசியல் ரீதியான முன்னெடுப்பை ஐரோப்பா அளவில் ஸ்பெயின் எடுத்துள்ளது. அதன்படி, ஸ்பெயின் நாடாளுமன்றத்தில், பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 185 பேரும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர். 

    இந்த மசோதா நிறைவேற்றத்தை உலகெங்கிலும் பெருவாரியான பெண்கள் வரவேற்று வருகின்றனர். மேலும், பல நாடுகளில் இப்படியான முன்னெடுப்புகள் வரவேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். 

    இந்த மசோதா மூலம் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது. அதேநேரம், இதற்கு முன்னதாக ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா, தைவான் போன்ற நாடுகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

    தொடங்கியது, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் பணிகள்.. குஷியில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....