Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி; கோப்பையை தட்டிச் சென்ற இந்தியன் வங்கி அணி

    புதுச்சேரியில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி; கோப்பையை தட்டிச் சென்ற இந்தியன் வங்கி அணி

    புதுச்சேரியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் 3-1 என்ற கோள் கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று சுழற் கோப்பையை தட்டிச் சென்றது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 4-வது இடத்தை பிடித்தது.

    புதுச்சேரியில் நமோ 2022 என்ற பெயரில் லே ஹாக்கி அசோசியேஷன் சார்பில் தென் மண்டல அளவிலான ஹாக்கிப்போட்டி லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. 9-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 22 அணிகளைச் சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.

    இதில் இறுதி சுற்றுக்கு சென்னை ஜிஎஸ்டி அணியும் சென்னை இந்தியன் வங்கி அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜிஎஸ்டி அணியை தோற்கடித்து சென்னை இந்தியன் வங்கி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு சுழல் கோப்பையும் ரூ.50,000 முதல் பரிசையும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

    மேலும் இதனை தொடர்ந்து சென்னை ஜி எஸ் டி அணிக்கு இரண்டாவது பரிசையும், கேரள அணிக்கு மூன்றாவது பரிசையும் சென்னை எஸ். ஆர். எம். கல்லூரி அணிக்கு நான்காவது பரிசையும் வழங்கினார்.

    இதுகுறித்து முதல் பரிசு பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணியினர் கூறும்போது, புதுச்சேரியில் தென் மண்டல அளவில் விளையாடி முதல் பரிசை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சென்னை ஜி. எஸ் டி.அணியை வீழ்த்தியதாக தெரிவித்த அவர் தொடர்ந்து இது போன்ற போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    விறுவிறுப்பான கட்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை; அரையிறுதி ஆட்டத்தில் எந்தெந்த அணிகள்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....