Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்இந்தியாதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20; கே.எல் ராகுல் இல்லை; அப்போ கேப்டன்?

  தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20; கே.எல் ராகுல் இல்லை; அப்போ கேப்டன்?

  ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் தொடர் இன்று ஆரம்பிக்கவுள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவினை எதிர்கொள்கிறது. 

  இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்துள்ள நிலையில், இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். குலதீப் யாதவும் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

  கே.எல்.ராகுலின் விலகலையடுத்து ரிஷப் பண்ட்டிற்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்திய அணி..

  இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறமையுள்ள உம்ரான் மாலிக், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தினைப் பிடித்திருந்தார். இதுவரை சர்வதேசப் போட்டியில் ஒன்றில் கூட விளையாடாத உம்ரான் மாலிக்கின் மேல் பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  உம்ரான் மாலிக் மட்டுமின்றி ஒரு நீண்ட காலத்திற்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளார்.

  ஐபிஎல் போட்டிகளின் ஆரம்பக்கட்டத்திலேயே இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்கிற தனது விருப்பத்தினைத் தெரிவித்திருந்த தினேஷ் கார்த்திக், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய பல போட்டிகளில் தனது திறமையினை நிரூபித்துள்ளார்.

  ஆட்டத்தின் இறுதி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி, இந்திய அணிக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் தனது பழைய ஆல்ரவுண்டர் ஃபார்மிற்குத் திரும்பியிருப்பது அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

  இந்த வருட ஐபிஎல் போட்டியில் கோப்பையினை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேன், பௌலர் என அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

  டி20 உலகக்கோப்பை அருகில் இருக்கும் சமயத்தில் ஹர்திக் பாண்டியா பழைய நிலைக்குத் திரும்பி இருப்பது இந்திய அணிக்கு நல்ல விடயமாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்த யுவேந்திர சஹால் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார். இவர் மட்டுமின்றி ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், ரவி பிஷ்ணோய், அக்சார் படேல், ஆகிய பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  பேட்டிங்கிணைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  தென்னாப்பிரிக்கா..

  இந்த தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவிற்கு சரிசமமான அணியாக களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்த டி காக் அணியில் இடம்பெற்றுள்ளார்.

  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் டி காக் தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரிய பலமாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏய்டன் மார்க்ரம், ரீசா ஹென்றிக்ஸ், தெம்பா பாவுமா, வான் டெர் டுசென், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் பேட்ஸ்மேன்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

  குஜராத் அணியில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த டேவிட் மில்லர் அணியில் இடம்பெற்றிருப்பது தென்னாப்பிரிக்காவிற்கு மற்றொரு பலமாக அமைந்துள்ளது.

  பந்து வீச்சினைப் பொறுத்த வரையில், ககிஸோ ரபாடா இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றிச் நோர்ட்ஜெ, டிவைன் பிரிடோரியஸ், மார்கோ ஜான்சன், லுங்கி ங்கிடி, தப்ரைஸ் ஷாம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  கடைசி ஐந்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று டெல்லியில் நடைபெறும் இந்த முதல் டி20 போட்டியானது இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது.

  கண்டுபிடிக்கப்பட்டதா புற்றுநோய் மருந்து? – மகிழ்ச்சியில் மக்கள்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....