Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் சோனியா காந்தி

    மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லும் சோனியா காந்தி

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார். இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உடன் செல்வார்கள் என்று தெரிய வந்து உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை. என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று கட்சி பணிகளை கவனித்து கொண்டு வருகிறார்.இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரசை வலுப்படுத்தவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் நாடு முழுவதும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்தி வருகிறது. கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார். வருகிற 7-ந்தேதி இந்த யாத்திரையை அவர் தொடங்குகிறார்.அதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் 4-ந் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்று ராகுல்காந்தி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சோனியா காந்தி அவர்கள் தமது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பும் முன்பு, உடல் நிலை சரியில்லாத தனது தாயாரை சந்திப்பார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறி உள்ளார்.இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’ திரைப்படம் குறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....