Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஜனவரியில் இருந்து தொடங்குகிறது சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

    ஜனவரியில் இருந்து தொடங்குகிறது சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

    திருவாரூர், சேலம், கரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வருகின்ற ஜனவரி மாதம் 1000 மெகா வாட் சூரிய சத்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் கூறியுள்ளார்.

    முதன் முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, சூரிய சத்தி மின்சார மாவட்டங்களாக தமிழகத்தில் உருவாக உள்ளதாகவும், திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 மெகாவாட் சூரிய சத்தி மின்சாரம் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சொந்தமாக 3,263 ஏக்கர் நிலம் வாங்கியிருபதாகவும், காற்றாலை மின்சாரம் தயாரிப்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தற்போது வரை சிறப்பாக இருந்து வருகிறதாகவும், சூரியசத்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருந்து வருகிறது.

    மேலும் விரைவில் 1,000 மெகா வாட் மூலம் சூரிய சத்தி மின்சாரம் தயாரிக்க இத்திட்டம் தொடங்கப்பட்டால் தமிழகம் முதன் மாநிலமாக திகழும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் கூறியுள்ளார்.

    இதையும் படிங்கபல ஆண்டுகளாக போராடிக் கேட்ட கல்யாண மண்டபம்: மக்களின் கோரிக்கைக்கு விடிவுகாலம் பிறந்ததா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....