Monday, March 25, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக் பிக் காட்சிகள் வெளியீடு...

    பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக் பிக் காட்சிகள் வெளியீடு…

    பொன்னியின் செல்வன் நாளை வெளியாகவுள்ள நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு, முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாள்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில், கார்த்தியும் ஜெயராமும் உரையாடிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் குரலில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் அறிமுக விடியோ சமீபத்தில் வெளியாகியது. முதல் பாகத்திற்கும் கமல்ஹாசன் குரலில் கதாபாத்திரங்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

    கர்நாடக தேர்தல் பிரச்சாரம்; ஓட்டலில் தோசை சுட்ட ப்ரியங்கா காந்தி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....